Monday, April 18, 2011

நல்லதும் தீயதும் - Good and Evil

நகரத்தின் முதியவர் ஒருவர் கேட்டார், " நல்லது மற்றும் தீயது பற்றி சொல்லுங்கள்"

குரு பதிலுறைத்தார் - உங்களுள் உரையும் நல்லவை பற்றி பேசுகிறேன், தீயவை பற்றி அல்ல.

நல்லவைகளின் பசியாலும், தாகத்தாலும் துன்புறுத்த பெற்றவையே தீயவயாகும். நல்லவற்றிற்கு பசி எடுக்கும் பொழுது, இருண்ட குகைக்குள்ளும் அது உணவு தேடும், தாகத்தின் பொது இறந்த நீரையும் அது உட்கொள்ளும்.

நீ உன்னோடு ஒன்றி இருக்கும் பொழுது நல்லவன். நீ உன்னோடு ஒன்றி இல்லாத பொழுது கெட்டவன் அல்ல. பிரிக்கப்பட்ட வீடு திருடர்களின் கூடாரம் ஆகி விடாது, அது வெறும் பிரிக்கப்பட்ட வீடு மட்டும் தான். துடுப்பிலாத படகு ஆபத்தான தீவுகளில் சுற்றி திரியுமே தவிர, ஆழத்தில் மூழ்கி விடுவதில்லை.

உன்னையே நீ உருக்கி தந்துவிடும் பொழுது நல்லவனாகிறாய். உனக்காக சிறிது லாபம் எதிர்பார்க்கும் பொது நீ கெட்டவனாவது இல்லை. உனக்கு லாபம் தேடும் பொழுது, இந்த பூமித்தாயை இறுகப்பிடித்து, அவள் மாரிலிருந்து நீரை உறிஞ்சும் வேராகிறாய். பழம் வேரை பார்த்து, "என்னை போல் இரு, பழுத்து பழுத்து உன்னை ஊருக்கு கொடு" என்று கூறுவது இயலாது. பழத்திற்கு கொடுப்பது தேவை, வேரிர்க்கு பெறுவதே தேவை !

விழிப்புடன் பேசும் பொழுது நல்லவனாகிறாய். ஒரு நோக்கமில்லாத பேச்சில் நா தளதளக்கும் போது நீ தீயவனாகிவிடுவதில்லை. உனது குறிக்கோளை நோக்கி உறுதியுடன் துணிந்து நடக்கும் பொழுது நல்லவனாகிறாய். அதுவே, நடக்க இயலாமட்போய், தத்தி-தவழ்ந்து செல்லும் பொழுது நீ தீயவனாகிவிடுவதில்லை. தத்தி-தவழ்ந்து செல்பவர் கூட பின்னோக்கி செல்வதில்லையே ! உறுதியும், வேகமும் பெற்ற நீ, நொண்டி செல்பவரின் முன், அவர் பொருட்டு இறக்கம் காட்டுவதற்காக கூட, உன் வேகத்தை குறைத்து செல்லாதே !

எண்ணிலடங்கா வகைகளில் நீ நல்லவனாகிறாய், நீ நல்லவனாக இல்லாத பொழுது, தீயவனகிவிடுவதில்லை.உன் பிரம்மாண்டமான சுய வளர்ச்சியை நாடுவதில் உன் நல்லவை அடங்கி உள்ளது. அது அனைவரிடத்திலும் உள்ளது. ஆனால், அந்த நாட்டம் ஒரு சிலரிடத்தில் கொந்தளித்து எழும் வேகமும், சீற்றமும் கொண்ட அலை போலவும், மற்றவரிடத்தில், வளைந்து, நெளிந்து, செல்லும் பாதையிலேயே தொலைந்து போகும் மெல்லிய நீரோட்டம் போலவும் இருக்கும்.

கொந்தளிக்கும் பேரலை போல் நாட்டம் உள்ளவன், மற்றவனை பார்த்து - "ஏன் இப்படி, மெல்ல ஊர்ந்து செல்கிறாய் ?" என்று கேட்காமல் இருக்க வேண்டும். அதாவது, நல்லவனாய் இருக்க வேண்டுபவன், அம்மணமாக இருப்பவனிடம் -" உன் உடை எங்கே ? " என்றும், வீடு இல்லாமல் சுற்றி திரிபவனிடம் " உன் வீட்டிற்க்கு என்ன ஆயிற்று ?" என்றும் கேட்காமல் இருக்க வேண்டும் !

Click Here for the original English version.

0 comments: