Wednesday, September 01, 2010

ஸ்ரீ மகா மாரியம்மனின் வரலாற்று கதை ..

இந்து பண்பாட்டில் வழிபடப்படும் ஒவ்வொரு தெய்வத்திற்கும், அந்த தெய்வத்தின் ஆதியை பற்றிய கதைகளும், அந்த தெய்வத்தின் சிறப்புகளை பறைசாற்றும் கதைகளும், பல உண்டு. ஒரு சில தெய்வங்களின் ஆதியை பற்றிய கதைகள், மாறுபட்டு ஒன்றுக்கும் மேற்பட்ட வடிவங்களில், சொல்லப்படுகின்றன. இந்த வகையில், மாரியம்மனின் கதையும் பல வடிவங்களில் சொல்லபடுகிறது.

அதில் ஒன்றை, கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிசேக பத்திரிக்கையில், இரத்தின சுருக்கமாக, அழகாக குறிப்பிட்டுள்ளனர். இதோ உங்கள் பார்வைக்காக.

" தேவர்களை வெற்றி கொள்வதற்காக அசுரர்கள் ஆபிசார யாகம் நடத்தி அதன் மூலம் பல தீய சக்திகளை உருவெடுக்க செய்தனர். அதனால் பயமடைந்த தேவர்கள் சிவபெருமானை சரணடைந்தனர். சிவபெருமான் தனது சடையில் தாங்கி நிற்கும் கங்கையிலிருந்து ஒரு சக்தியை தோற்றுவித்தருளினார் குளிர்ச்சியான கங்கையிலிருந்து தோன்றிவளாதலால் சீதளாதேவி என்னும் நாமம் கொண்டு அசுரர்களின் ஆபிசார சக்தியை அழித்து தேவர்களை காத்தருளினால்.

ஒருசமயம் மாராசுரன் எனும் அரக்கன் கடுந்தவம் புரிந்து பல வரங்களைப்பெற்று மூவுலகத்தையும் அழிக்க முற்பட்டான். அப்பொழுது தமது தவ வலிமையால் எல்லோர் உடலிலும் கொப்புளங்களையும், ஜுர நோயையும் ( அம்மை ) வருமாறு செய்தான். தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி ஸ்ரீ சீதளாதேவி மாரசுரனுடன் போரிட்டு அவனை அழித்ததுடன் அவனால் ஏற்படுத்தப்பட்ட உஷ்ண நோய் தணியுமாறு எங்கும் மழை பெய்வித்தருளினால். மாரசுரனை அழித்ததாலும், எங்கும் மாரி( மழை ) பெய்வித்ததாலும் மூவுலகும் ஸ்ரீ சீதளாதேவியை ஸ்ரீ மகா மாரி என்னும் திருநாமத்தால் போற்றி வழிபட தொடங்கினர். "

-- நன்றி - கோலாலம்பூர், ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானம்

0 comments: